நத்தப்பேட்டையில் ரயில் முன் பாய்ந்து டிஎஸ்பி கார் ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார்

காஞ்சிபுரம் டிஎஸ்பி-யின் கார் ஓட்டுநராக இருந்த சதீஷ்(38) நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக இருப்பவர் முகிலன். இவரது கார் ஓட்டுநராக சதீஷ்குமார் இருந்து வந்தார். வாலாஜாபாத் பகுதியில் வசித்து வந்த இவர் முதல்நிலை காவலராக இருந்தார். இவரது மனைவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். இவர் குடும்பப் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நத்தப்பேட்டையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முகிலன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்

Google+ Linkedin Youtube