மேற்கு வங்கத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்

மேற்கு வங்கத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தல் நடப்பதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. தேர்தல் மோதல்களில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களிடையே வன்முறை ஏற்பட்டது. இதில் திரிணமூல் கட்சியைச் சேர்ந்த 14 பேர் இறந்ததாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

வன்முறைகளில் பாஜகவினர் 52 பேர் இறந்ததாக பாஜக கூறியது. இன்றைய தேர்தலின்போது வன்முறை நடக்காமல் தடுக்க மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 17-ம் தேதி முடிவுகள் வெளியாகிறது.

Google+ Linkedin Youtube