பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றவர்களின் பட்டியல் (Rank List) வெளியிடும் முறை கடந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. மாணவர்கள் மத்தியில் மனச்சோர்வு ஏற்படுவதையும், தேவையில்லாமல் பள்ளிகளுக்கு இடையே ஆரோக்கியமில்லாத போட்டி உருவாவதை தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.

       

எனவே, இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வு ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படாது. 1200-க்கு 1100-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர், 1000-க்கு மேல் எடுத்தவர்கள் எத்தனை பேர் என்பது போன்ற விவரங்களும், பாடவாரியாக 200-க்கு 200 பெற்றவர்களின் எண்ணிக்கை விவரங்களும் மட்டுமே வெளியிடப்படும்.

நிகழ் நேரப் பதிவு

10.30 AM: 2013-ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை மாணவர்களை விட மாணவிகளே தொடர்ந்து அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.  விரிவாக வாசிக்க:

10.25 AM: மாணவர்களின் மதிப்பெண்களை விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

செங்கோட்டையன் - கோப்புப் படம்

10.10 AM: 231 பேர் 1180க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 1180 மதிப்பெண்களுக்கு மேல் மாணவர்கள் 50 பேரும், மாணவிகள் 181 பேரும் பெற்றுள்ளனர்.

4,847 மாணவ, மாணவிகள் 1151 முதல் 1180 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 8,510 மாணவ, மாணவிகள் 1126 முதல் 1150 மதிபெண்கள் பெற்றுள்ளனர்.

71,368 மாணவ,மாணவிகள் 1001 முதல் 1100 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 1,07,266 மாணவ,மாணவிகள் 901-1000 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 1,65,425 மாணவ, மாணவிகள் 701 முதல் 800 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 700-க்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்கள் 3,47,938 பேர்.

10.00 AM: அரசுப் பள்ளிகளின் தேர்ச்சியிலும் விருதுநகர் மாவட்டம் 94.26% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது

9.55 AM: பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 238

9.50 AM: பாட வாரியாக தேர்ச்சி விகிதம்

இயற்பியல்- 96.4%

வேதியியல்- 95.0%

கணிதம்- 96.1%

உயிரியல்- 96.34

விலங்கியல்- 91.9%

தாவரவியல்- 93.9%

வணிகவியல்- 90.30%

கணக்குபதிவியல்- 91%

கணினி அறிவியல்- 96.1%

9.45 AM: மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 97% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஈரோடு மாவட்டம்  96.3 % தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும் திருப்பூர் மாவட்டம் 96.1% மூன்றாம் இடத்திலும் உள்ளது.  விழுப்புரம் மாவட்டம் 83.35% சதவிகிதத்துடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது

9.40 AM: பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 1,907

 

9.35 AM: பிளஸ் 2 மறுதேர்வு ஜூன் 25-ம் தேதி நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

9.30 AM: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களிலும் அறிந்துகொள்ளலாம். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகியவற்றில் காண முடியும்.

9.15 AM: மாணவிகள் 94.1%, மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6.4% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

9.05 AM: பிளஸ் 2 தேர்வில் 91.1% தேர்ச்சி பெற்றிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமைச்சர் செங்கோட்டையன் | கோப்புப் படம்.

9.00 AM: பிளஸ் 2 தேர்வில் 91.1% தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. சென்னை டிபிஐ வளாகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசந்தராதேவி, தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அடுத்த சில வினாடிகளில் அனைத்து மாணவ, மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களிலும் அறிந்துகொள்ளலாம். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, ww.dge2.tn.nic.in ஆகியவற்றில் காண முடியும்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாநில அளவிலோ, மாவட்ட அளவிலோ சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளின் பட்டியல் எதுவும் வெளியிடப்படாது. கடந்த ஆண்டு வரை தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்கள் பத்திரிகையாளர்களிடம் நேரில் வழங்கப்படும். இந்த நடைமுறையும் இந்த ஆண்டு மாற்றப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தொடர்பான புள்ளி விவரங்களை தேர்வுத் துறையின் இணையதளத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டு வரை ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை நடைமுறை இருந்ததால் தேர்வு முடிவு வெளியாகும் நாளில் டிபிஐ வளாகம் மிகவும் பரபரப்பாக காணப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டு முதல் ரேங்க் வெளியிடும் முறை கைவிடப்பட்டதால் தேர்வு முடிவுகள் தொடர்பான புள்ளி விவரங்களை பெற பத்திரிகையாளர்கள் மட்டுமே தேர்வுத் துறை அலுவலகத்துக்கு சென்றிருந்தனர். இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பத்திரிகையாளர்களும் தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் டிபிஐ வளாகம் வெறிச்சோடி காணப்படும்.

Google+ Linkedin Youtube