நமிதா வில்லியாக நடிக்கிறார்

நமிதா நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ‘இளமை ஊஞ்சல்’. 2016-ம் ஆண்டு ரிலீஸானது. அதே ஆண்டு மலையாளத்தில் ரிலீஸான ‘புலி முருகன்’ படம்தான் பிற மொழிகளில் நமிதா நடித்து வெளியான படங்களில் கடைசிப் படம். அதன்பிறகு எந்தப் படமும் வெளியாகவில்லை.

 

அரசியலில் ஆர்வம் காட்டிய நமிதா, அதிமுகவில் உறுப்பினராக இணைந்தார். ஒருசில அதிமுக கூட்டங்களில் பங்கேற்கவும் செய்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலிலும் ஆர்வம் காட்டாமல், தொழிலதிபரான வீரேந்திர செளத்ரியைக் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார் நமிதா. 11 வருடங்களுக்குப் பிறகு டி.ராஜேந்தர் இயக்க இருக்கும் படத்தில், நமிதா தான் வில்லி. ஃபவர்புல்லான கேரக்டர் என்பதால், டி.ஆர். கதையை சொல்லிய உடனேயே ஓகே சொல்லிவிட்டார் நமிதா. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இதுதவிர, வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள ‘பொட்டு’ படத்தில் அகோரியாகவும் நடித்துள்ளார் நமிதா. பரத் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், இனியா மற்றும் சிருஷ்டி டாங்கே என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். விரைவில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு வருகின்றனர்.

Google+LinkedinYoutube