இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் அவார்ட்ஸ்

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் விஜய் அவார்ட்ஸ் விழா நடைபெற இருக்கிறது.

சினிமாவில் சாதனை படைத்த நடிகர் - நடிகைகள் மற்றும் திரைக்குப் பின்னால் உள்ள கலைஞர்களுக்கு, விஜய் தொலைக்காட்சி விருது வழங்கி கவுரவித்து வரும் விழா ‘விஜய் அவார்ட்ஸ்’. 9 வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்ற இந்த விழா, கடந்த இரண்டு வருடங்களாக சில காரணங்களால் நடைபெறவில்லை.

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, 10-வது வருடமாக இந்த வருடம் விஜய் அவார்ட்ஸ் விருது விழா நடைபெற இருக்கிறது. இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், அனுராக் காஷ்யப், யூகி சேது மற்றும் நடிகை ராதா ஆகியோர் நடுவர்களாக இருந்து இந்த வருடத்துக்கான வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

வருகிற சனிக்கிழமை, மிகப் பிரம்மாண்டமாக இந்த விழா நடைபெற இருக்கிறது. திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்துகொள்ளும் இந்த விழாவில், அஞ்சலி, சயீஷா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகளின் நடனங்கள் இடம்பெறுகின்றன. அதுமட்டுமின்றி, நடிகர் ஹரிஷ் கல்யாணின் சிறப்பு கலைநிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

Google+ Linkedin Youtube