தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த முடிவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையம் முடிவு செய்துள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் 4 பேர் கொண்ட குழுவை தமிழகத்துக்கு அனுப்பவுள்ளது. வழக்கறிஞர் ராஜராஜன் மனுவை அடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. குழுவானது 2 வாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் என்று கூறியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

மக்களின் போராட்டம், அரசியல் கட்சிகளின் கோரிக்கையை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. மேலும் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Google+LinkedinYoutube