சட்டவிரோதமாக குடிநீர் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: சிம்லா காவல்துறை எச்சரிக்கை

கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சிம்லாவில் சட்டவிரோதமாக குடிநீர் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அந்நகர காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சிம்லா நகரின் துணை கமிஷனர் அமித் காஷ்யப் கூறும்போது, "சட்டவிரோதமாக குடிநீரை விற்பனை செய்வது தொடர்பாக நிறைய புகார்கள் வந்துள்ளன. அவை சரியான புகார்கள்தான். நாங்கள் அவர்களின் விற்பனை ரத்து செய்து உள்ளோம். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இன்னும் சில குற்றவாளிகளை பிடிக்க விசரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக மா நில முதல்வர் மற்றும் மாநில முதன்மை செயலாளரிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் நிலைமை சரி செய்யப்படும்" என்றார்.

முன்னதாக இந்தியாவின் மலைப் பிரதேசமான சிம்லா தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவின் தலைநகரங்களில் ஒன்றான கேப் டவுனில் எத்தகைய தண்ணீர் பற்றாக்குறை நிலவியதோ அதே சூழலைத்தான் தற்போது சிம்லா மக்கள் சந்தித்துள்ளனர். 

சுமார் பத்து நாட்களாக சிம்லாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே தண்ணீர் பற்றக்குறை நிலவி வந்த சிம்லாவில் மே 20-ம் முதல் தண்ணீர் பஞ்சமாக மாறியுள்ளது.

இதன்காரணமாக சுமார் 1,70,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறையை பயன்படுத்தி பல தனியார் நிறுவனங்கள் பாட்டீல் குடிநீரை பன் மடங்கு விற்பனை செய்து வருவதாக சிம்லா மக்கள், சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்துள்ளன.

மேலும் இது சுற்றுலா சீசன் என்பதால் சிம்லாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் சுற்றுலா பயணிகள் யாரும் சிம்லாவுக்கு வருகை தர வேண்டாம் என்று சிம்லா மக்கள் அன்பு வேண்டுதல் விடுத்துள்ளனர்.

அபினவ் சாண்டல் என்பவர், "மலைகளை நேசிக்கிற அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், சிறிது காலம்ஷிம்லாவுக்கு வருவதை நிறுத்திவுடுங்கள் என்று இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார்.

போலீஸாரின் பலத்த பாதுகாப்பில் குடிமக்களுக்கு குடிமக்களை லாரியில் வழங்கி வருகிறது இமாச்சல் பிரதேச அரசு.

இந்த சிம்லாவின் முன்னாள் மேயர் திகென்ந்தர் பன்வார்  கூறும்போது, ”பருவ நிலை மாற்றமே இந்த தண்ணீர் பற்றக்குறைக்கு காரணம் அதுமல்லாது. மழை பெய்து மழை நீர் நிலத்துக்கடியில் சரிவர தேக்கி வைக்க முடியாததன் விளைவின் காரணமாகவே இந்த பஞ்சம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

சிம்லாவில் தண்ணீர் பற்றாக்குறையை உடனடியாக நீக்கக்  கோரி எதிர்க் கட்சிகள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Google+ Linkedin Youtube