'தேவராட்டம்' அப்டேட்: கௌதம் கார்த்திக் ஜோடியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தம்

முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் 'தேவராட்டம்' படத்தில் மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்கிறார்.

'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடிவீரன்' ஆகிய படங்களை இயக்கிய முத்தையா தற்போது கௌதம் கார்த்திக்கை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு 'தேவராட்டம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். பிரவீன் கே.எல் -வீரமணி ஆகிய இருவரும் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் உயர்த்திப் பிடித்துப் படம் எடுக்கும் முத்தையா நேரடியாக 'தேவராட்டம்' என்று டைட்டில் வைத்து படம் எடுப்பதால் இதுவும் சாதி ரீதியாகவே இருக்கும் என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Google+ Linkedin Youtube