தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; காயமடைந்தவர்களுக்கு சரத்குமார் நேரில் ஆறுதல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுற்றுவட்டார கிராம மக்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தினர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். பலரும் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவ்வாறு சிகிச்சை பெறுபவர்களை பல்வேறு அரசியல் கட்சியினர் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) துத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Google+ Linkedin Youtube