‘பிக் பாஸ் 2’ தமிழ் ஒளிபரப்பு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் 2’ தமிழ் நிகழ்ச்சி, வருகிற 17-ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் கடந்த வருடம் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், ஆரவ், ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், ஹார்த்தி, அனுயா, காஜல், கணேஷ் வெங்கட்ராம், கஞ்சா கருப்பு, ரைஸா வில்சன், பரணி, ஷக்தி வாசு, சுஜா வருணி, ஜூலி, நமிதா, ஸ்ரீ என மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

கடந்த வருடம் ஜூன் 25 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைந்தது. இதில், ஆரவ் போட்டியின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். ‘ஓவியா ஆர்மி’ ஆரம்பிக்கும் அளவுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை பெருகியது. அதேசமயம், ஜூலி, காயத்ரி ரகுராம், ஷக்தி ஆகியோர் மீது எதிர்மறையான எண்ணம் தோன்றவும் இந்த நிகழ்ச்சி காரணமாக அமைந்தது.

Google+ Linkedin Youtube