அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்க நெருக்கடி: ‘காலா’வுக்குப் பதிலாக ‘ஜுராஸிக் வேர்ல்டு’ திரையிட முடிவு

அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்க நெருக்கடி கொடுத்ததால், ‘காலா’வுக்குப் பதிலாக ‘ஜுராஸிக் வேர்ல்டு’ படத்தைத் திரையிட கமலா சினிமாஸ் முடிவு செய்துள்ளது.

சென்னை, வடபழனியில் அமைந்துள்ள கமலா சினிமாஸ். இங்கு இரண்டு ஸ்கிரீன்கள் உள்ளன. இதில், ரஜினிகாந்த் நடிப்பில் நாளை ரிலீஸாக இருக்கும் ‘காலா’ படத்துக்குப் பதிலாக ‘ஜுராஸிக் வேர்ல்டு: ஃபால்லன் கிங்டம்’ படத்தைத் திரையிட முடிவு செய்துள்ளனர். காரணம், பொதுமக்களிடம் அதிகமாக டிக்கெட் கட்டணம் வசூலிக்குமாறு விநியோகஸ்தர் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்க முடியாது என்பதால், ‘காலா’வுக்குப் பதிலாக ‘ஜுராஸிக் வேர்ல்டு’ படத்தை வெளியிடுகிறோம் என கமலா சினிமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அசோக் பில்லரில் அமைந்துள்ள உதயம் திரையரங்குகளிலும் ‘காலா’ படம் திரையிடப்படவில்லை.

Google+LinkedinYoutube