குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பூட்டிய அறையில் ஊழியரின் பிணம்: போலீஸார் சந்தேகம்

புதுடெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பணியாளர் குடியிருப்பு ஒன்றில் குடியரசுத் தலைவரின் செயலகத்தில் பணியாற்றி வந்த ஊழியரின் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில் ‘‘குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பணியாளர் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதில் ஒரு வீட்டில் நான்காம் நிலை ஊழியரின் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் குடியரசுத் தலைவரின் செயலகத்தில் பணியாற்றி வந்தவர். சிலநேரங்களில் அவர் உடல்நலக் குறைவாகக் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நேற்று பணியாளர் குடியிருப்பிலிருந்து துர்நாற்றம் வெளிப்பட்டதால் சந்தேகித்த மற்ற குடியிருப்பு வாசிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அறை உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. பிறகு உரிய அதிகாரிகளின் முன்னிலையில் கதவை உடைத்து சென்றபோது ஊழியர் இறந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது தெரியவந்தது. இவரது குடும்பம் வெளியூர் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக இவ்வுடல் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. குடியரசத் தலைவர் மாளிகை வளாக குடியிருப்பு வீட்டுக்குள் நிகழ்ந்துள்ள இந்த மரணம் குறித்து போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது’’ என போலீஸார் தெரிவித்தனர்.

Google+ Linkedin Youtube