லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற இன்ஃபோசிஸ் முடிவு

லண்டன் மற்றும் பாரீஸ் பங்குச்சந்தைகளில் இருந்து வெளி யேற இன்ஃபோசிஸ் இயக்குநர் குழு முடிவெடுத்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் இந்த இரு பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறலாம் என்னும் எண்ணத்தை நிறுவனம் வெளிப்படுத்தியது. மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பரிவர்த்தனை (இன்ஃபோசிஸ் ஏடிஎஸ்) நடப்பதால் வெளியேற முடிவெடுத்திருப்பதாக இந்திய பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் நியூயார்க் பங்குச்சந்தையில் சராசரியாக வர்த்தகமானதை விட, இந்த இரு சந்தைகளிலும் குறைவாக அளவுக்கே வர்த்தகமானதாக தெரிவித்திருக்கிறது. அதேசமயத்தில் இந்த இரு சந்தைகளில் இருந்து விலக்கி கொண்டாலும் இன்ஃபோசிஸ் பங்குகள் மற்றும் ஏடிஎஸ் எண்ணிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது. ஆனால் நியூயார்க் பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடரும் என நிறுவனம் அறிவித்திருக்கிறது.

வரும் ஜூன் 18 முதல் ஜூன் 29-ம் தேதி வரையில் இந்த இரு சந்தையிகளிலும் பங்குகளை வைத்திருப்பவர்கள் விற்பதற்கு அனுமதி வழங்கப்படும். ஜூலை 4-ம் தேதி விலக்கிக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டி ருக்கிறது.

இந்த இரு சந்தைகளிலும் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இன்ஃபோசிஸ் பட்டியலிடப் பட்டது

Google+LinkedinYoutube