மீண்டும் மும்தாஜிடம் சண்டை போடும் நித்யா: இதுக்கு ஒரு எண்ட் இல்லையா ‘பிக் பாஸ்’?

தன்னைத் திருத்திக் கொள்கிறேன் என்று சொல்லியும் கூட மறுபடியும் மும்தாஜிடம் சண்டை போடுவதால் நித்யா மீது மற்ற போட்டியாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கி 5 நாட்கள் ஆனாலும், பெரிய சுவாரசியம் இல்லாமல் நகர்ந்து வருகிறது. எங்கு சண்டையை ஆரம்பிப்பது எனத் தெரியாமல், ஏற்கெனவே இருக்கும் பாலாஜி - நித்யா சண்டையைக் கொண்டு ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது ‘பிக் பாஸ்’ கிரியேட்டிவ் டீம். இந்த சண்டை, தற்போது மும்தாஜ் - நித்யா இடையிலான சண்டையாக உருப் பெற்றுள்ளது.

சமையல் செய்வதில் மும்தாஜ் - நித்யா இடையே பிரச்சினை ஏற்பட, நித்யா ரொம்பவே பிடிவாதமாக நடந்து கொண்டார். அதை எல்லோரும் அவருக்குப் புரியவைக்க, இனிமேல் அப்படி நடந்துகொள்ள மாட்டேன் என வாக்குறுதி கொடுத்தார். ஆனால், அந்த வாக்குறுதியையும் மீறி மறுபடியும் பழைய மாதிரியே நடந்துகொள்ள ஆரம்பித்துள்ளார் நித்யா.

இன்று வெளியான புரமோ வீடியோவில், “மும்தாஜ், ஏதோ கூப்பிட்டீங்களே...” என்று நித்யா கேட்க, “முதல்ல சமையலுக்கு முன்னுரிமை கொடுங்க” என்கிறார் மும்தாஜ். “நான் இங்க உட்கார்ந்துகிட்டு இருக்கும்போது கூப்பிட்டிருக்கலாமே...” என்று கேட்கிறார் நித்யா. “நீங்க இங்க இருக்கீங்கனு நான் பார்க்கல” என்கிறார் மும்தாஜ்.

“சரி, அடுத்த தடவையில இருந்து பாருங்க” என்று நித்யா சொல்ல, “நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க” என்கிறார் மும்தாஜ். “இங்கேயே நீங்க உட்காருங்கனு உங்களால சொல்ல முடியாது, சரியா?” என்று நித்யா சொல்ல, மும்தாஜ் கோபமாகிறார்.

அதைப் பார்க்கும் மமதா சாரி, “கஷ்டமா இருக்கு” என்று நித்யாவிடம் சொல்ல, “எனக்கு கூட உங்களைப் பார்த்த ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று பதிலுக்கு சொல்கிறார் நித்யா. அது மமதா சாரிக்கு நோஸ்கட்டாக அமைய, ‘உதவ நினைச்சதுக்கு மன்னிக்கணும்” என்கிறார் அவர். “கஷ்டம் இருந்தா நானே வந்து சொல்றேன், அப்போ சப்போர்ட் பண்ணுங்க” என்கிறார் நித்யா.

இதைப் பார்க்கும் பாலாஜி, “எல்லார்கிட்டயும் கெட்ட பெயர் வாங்கிட்டாங்க. காண்டாகுது... சர்ர்ர்ர்னு ஏறுது...” என்கிறார். என்ன நடக்கப் போகிறது? உண்மையிலேயே மும்தாஜ் - நித்யா சண்டை நடக்கப் போகிறதா? இல்லை வழக்கம்போல் புரமோஷனைக் காட்டி ஏமாற்றப் போகிறார்களா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் அறிந்து கொள்ளலாம்.

Google+ Linkedin Youtube