சவுதிக்கு ரகசியமாக ஆயுதங்கள் விற்பனை: மறைக்கும் பிரிட்டன்

சவுதி அரேபியாவுக்கு ரகசியமாக ஆயுதங்கள் விற்பனை செய்வதை பிரிட்டன் தொடர்ந்து மறைத்து வருகிறது.

இந்தச் செய்தியை கார்டியன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது, அதில் "2015 ஆம் ஆண்டுமுதல் ஏமனில் உள் நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதிபர் மன்சூர் ஹைதிக்கு சவுதி அரேபியாவும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும் ஆதரவு அளிக்கின்றன.  இந்த நிலையில் சவுதிக்கு  பிரிட்டனில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள்  சட்டத்துக்கு விரோதமாக விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு லண்டனில் நடந்து வருகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை பிரிட்டன் தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ள இந்தச் சூழலில் சவுதிக்கும் பிரிட்டன் தொடர்ந்து ஆயுதம் விற்பனை செய்தது பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது.

ஆயுதங்களை சவுதி அரேபியாவிற்கு விற்றதன் மூலம் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை பிரிட்டன்  மீறி விட்டதாகவும் சர்வதேச மனித உரிமை ஆணையம் பிரிட்டனை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube