பாலிவுட் சினிமாவில் நடிக்கிறார் லாலு பிரசாத் மகன் தேஜ் பிரதாப்: அரசியலுக்கு முழுக்கா?

ராஷ்ட்ரீய  ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத்தின் மகனும் முன்னாள் பீகார் சுகாதார அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் பாலிவுட் திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களால் நன்கு அறியப்பட்டவர் தேஜ் பிரதாப், அவர், தான் நடித்து வெளிவர உள்ள 'ருத்ரா - தி அவ்தார்' திரைப்படத்தின் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் விரைவில் என பதிவிடப்பட்ட இரண்டு விதமான படங்களை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் திரைப்படம் ஒன்றில் தேஜ்  பிரதாப் கதாநாயகனாக நடிப்பது இதுவே முதல்முறையாகும். இதற்குமுன் 2016ல் இவர் பீகாரில் சுகாதார அமைச்சராக பணியாற்றியபோது முதல்வர் கதாப்பாத்திரத்தில் போஜ்புரி திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார்.

தேஜ் பிரதாப்புக்கு சென்ற மாதம்தான் திருமணம் ஆனது, அதை யொட்டி அவர் கோவில்களுக்கும் சென்று வருகிறார். அது குறித்து கேட்டபோது, இவை சமயச்சடங்குகள் என்றார்.

முன்னாள் துணை முதல்வரும் தற்போதைய பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான அவரது தம்பி தேஜஸ்வி யாதவ் போலவே இவருக்கும் தனது சொந்த விஷயங்களை வெளிப்படையாக பேசுவதில்லை. ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளும் ஆர்வமும் அவருக்கு இல்லை.

தேஜ் பிரதாப் போலன்றி, தேஜஸ்வி வெளிப்படையாகவே லல்லு பிரசாத்தின் அரசியல் வாரிசாக பலமுறை பரிசீலிக்கப்பட்டுள்ளார். அவர் முதல்வர் பதவிக்கும் தயார்படுத்தப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் 'ருத்ரா - தி அவ்தார்' திரைப்பட பிரவேசம், தேஜ் பிரதாப் அரசியல் பாதையைவிட்டு வெளியேறி திரைப்பட பாதையில் செல்வதற்காக தொடங்கப்படும் ஒரு புதிய அத்தியாயமாக இருக்க வாய்ப்புள்ளது என அவரைச் சுற்றியுள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Google+LinkedinYoutube