கண்டுபிடித்ததோ இந்தியர்கள், கடைசியில் அழியப்போவதோ ஒட்டுமொத்த பூமியும் தான்.!

3 விளைவுகளை எதிர்நோக்கலாம். விளைவு 01 : சூடு நீரில் போட்ட நூடூல்ஸ் போல.! இந்த முதல் விளைவை - ஸ்பேகட்டிபிக்கேஷன் (Spaghettification) என்கிறார்கள் அறிவியல் விஞ்ஞானிகள். அதாவது, பிளாக்ஹோலை மிகவும் நெருக்கமான முறையில் சந்திக்கும் எந்தவொரு பொருளும் நீட்டித்து விரிவடையும் (அதாவது சூடு நீரில் போட்ட நூடூல்ஸ் போல விரியும்). இந்த ஸ்பேகட்டிபிக்கேஷன் விளைவானது நூடூல்ஸ் எஃபெக்ட் (Noodles Effect) என்றும் அழைக்கப்படுகிறது. மற்றும் 'ஸ்பேகட்டி' (spaghetti) என்பது ஒரு பாஸ்டா வகையின் பெயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உயிர் இனங்கள் விரிந்து - கிழிந்து இறக்க நேரிடும்.! பூமி கிரகத்தில் இருக்கும் உயிர் இனங்கள் மற்றும் பெரும்பாலான பொருட்கள் விரிவடையும் தன்மை (அதாவது எலாஸ்டிக் தன்மை) கொண்டவைகளல்ல. ஆகையால், பிளாக் ஹோலுக்குள்ளே அல்லது பிளாக் ஹோலுக்கு மிக நெருக்கமாக பூமி சென்றால் உலகில் உள்ள மனிதர்கள் விரிந்து, அதன் விளைவாய் கிழிந்து இறக்க நேரிடும் என்கிறது இந்த ஸ்பேகட்டிபிக்கேஷன் விளைவு. விளைவு 02 : மிக அழகான முப்பரிமாண மயமாகும்.! பூமி கிரகம், பிளாக் ஹோலுக்குள் விழுந்தால் - முப்பரிமாண இருப்பை (Holographic Existence) உணரும் என்கிறது ஒரு அறிவியல் கோட்பாடு. அதாவது பூமி கிரகம் தன்னை தானே ஒரு நிறைவில்லாத பிரதியை (Imperfect copy) எடுத்துக்கொண்டு ஒரு வகையான மூப்பரிமான காட்சியை அளிக்குமே தவிர அழிந்து போகாது என்கிறது இந்த கோட்பாடு. கேட்பதற்கே மிக ரம்மியாமாக இருக்கிறதல்லவா.?! எல்லையை தீண்டும் எந்தவொரு பொருளும் அழியாது.! இந்த "முப்பரிமாண" கோட்பாடானது, இரண்டு எதிரெதிர் கோட்பாடுகளான ஃபூஸ்பால் (Fuzzbaal) மற்றும் ஃபையர்வால்ஸ் (Firewalls) ஆகிய இரண்டுக்குமே எதிர் கருத்தை முன் வைக்கும் ஒரு கோட்பாடாக திகழ்கிறது. ஃபூஸ்பால் கோட்பாடானது, பிளாக் ஹோல் எல்லையை தீண்டும் எந்தவொரு பொருளும் அழியாது என்கிறது. ஃபையர்வால்ஸ் கோட்பாடோ, பிளாக் ஹோல் எல்லையை தொடும் எந்தவொரு பொருளும் அழிந்து போகும் என்கிறது. விளைவு 03 : விரியவும் வாய்ப்பில்லை; கிழியவும் வாய்ப்பில்லை.! பிளாக் ஹோல் ஆனது தன்னை நெருங்கும் எந்தவொரு புதிய பொருள் மீதும் அதிகப்படியான கதிர்வீச்சை (Radiation) வெளிப்படுத்தும் பண்பை கொண்டது. அப்படியாக, பிளாக் ஹோல் மூலம் ஈர்க்கப்பட்டு ஸ்பேகட்டிபிக்கேஷன் விளைவு ஏற்பட்டு விரிவடைந்து கிழிவதற்கு முன்னே அதீத கதிர்வீச்சால் முழு கிரகமும் வருத்தெடுக்கப்படலாம்.

Google+ Linkedin Youtube