பலத்த காற்றுக்கு வாய்ப்பு; தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கவனமாக கடலுக்கு செல்ல வேண்டும்: சென்னை வானிலை மையம்

பலத்த காற்றுக்கான வாய்ப்பு உள்ளதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கவனமாக கடலுக்கு செல்ல வேண்டும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளதாவது:

"தென்மேற்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசும். குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 3.5 மீட்டர் முதல் 4.2 மீட்டர் வரையில் கடல் அலைகள் எழும். வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை, தேவாலா மற்றும் சின்னக்கல்லார் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google+LinkedinYoutube