ஆப்கனில் தற்கொலைப் படை தாக்குதல்: இந்துக்கள் 19 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் இந்துக்கள் 19 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து நங்கர்ஹார் மாகாணத்தின் கவர்னர் கூறும்போது,  "நங்கர்ஹார் மாகாணத்திலுள்ள ஜலாலாபாத் நகரத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் சீக்கியர்கள் மீது ஞாயிற்றுக்கிழமை தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் 19 பேர் பலியாகினர். இறந்தவர்களில் பலரும் சீக்கிய மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். காயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜலாலாபாத்திலுள்ள சிறுபான்மையினரை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து அதிபரை சந்திக்க இருக்கிறோம்” என்று கூறினார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தலிபான்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருவதால் அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சமீப கலாமாக இஸ்லாம் நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் சிக்கியர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்களை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube