‘களவாணி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்: ட்விட்டரில் வெளியிட்டார் மாதவன்

‘களவாணி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, மாதவன் தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டார்.

சற்குணம் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘களவாணி’. விமல், ஓவியா நாயகன் - நாயகியாக இந்தப் படத்தில் நடித்தனர். சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இளவரசு, சூரி, திருமுருகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, எஸ்.எஸ்.குமரன் இசையமைத்திருந்தார். ராஜா முகமது படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார். ரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப் படம், சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது.

இந்நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. விமல், ஓவியாவே மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தை, சற்குணமே தயாரித்தும் இருக்கிறார். முதல் பாகம் படம்பிடிக்கப்பட்டப் பகுதிகளிலேயே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக்கை மாதவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில் இசை வெளியிடப்படும் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube