டி20 போட்டி: இந்திய அணி டாஸ் வென்றது; தினேஷ் கார்த்திக்குக்கு இடம்?

ஓல்டுடிரோபார்டு நகரில் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது.

இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலாவது டி20 போட்டி ஒல்டு டிராபோர்டு நகரில் இன்று நடக்கிறது.

டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகார் தவண், விராட் கோலி, ரெய்னா, கே.எல். ராகுல், தோனி, ஹர்திக் பாண்டியா, புவனேஷ் குமார், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், யஜுவேந்திர சாஹல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த முறையும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி, நல்ல ஃபார்மில் இருந்தும் தினேஷ் கார்த்திக் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளது வேதனையாகும்.

ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் போட்டியில் அதே அணி இந்தப் போட்டியில் மாற்றமில்லாமல் களமிறங்குகிறது. இங்கிலாந்து அணியில் ஜேஸன் ராய், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோய் ரூட், மோர்கன், பேர்ஸ்டோ, மொயின் அலி, டேவிட் வில்லி, அதில் ரஷித், லியாம் பிளங்கெட், ஜோர்டான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Google+ Linkedin Youtube