மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி

மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கிறார்.

உதயநிதி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘கண்ணே கலைமானே’. சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில், தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். மதுரை வாடிப்பட்டியைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


இதைத் தொடர்ந்து அட்லீயின் உதவியாளர் ஈனாக் இயக்கத்தில் உதயநிதி நடிப்பதாக இருந்தது. ‘மேயாத மான்’ படத்தில் நடித்த பிரியா பவானிசங்கர், இந்துஜா இருவரும் ஹீரோயின்களாக ஒப்பந்தமானார்கள். ஆனால், திடீரென ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பு இந்தப் படம் டிராப்பானது.

இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கிறார். இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருக்கும் இந்தப் படத்தில், ஒரு ஹீரோயினாக நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தைத்தான் சாந்தனு பாக்யராஜை ஹீரோவாக வைத்து அறிவித்தார் மிஷ்கின்.

பி.சி.ஸ்ரீராம், சாந்தனு பாக்யராஜுடன் கூட்டணி அமைக்கும் மிஷ்கின்

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தரன் சந்திரசேகர் தயாரிப்பதாக இருந்தது. இடையில் என்ன ஆனதோ தெரியவில்லை. திடீரென சாந்தனுவுக்குப் பதில் உதயநிதி நடிக்கிறார். லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் இரண்டு நிறுவனங்களும் இல்லாமல், வேறொரு நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

Google+ Linkedin Youtube