இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 24 பேர் பலி

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகினர்.

இதுகுறித்து  இந்தோனேசிய அதிகாரிகள் தரப்பில், "இந்தோனேசியாவின் சுலேவேசி தீவிலிருந்து அருகிலுள்ள  தீவிக்கு பயணிகள் படகில் செல்லும்போது மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்துள்ளது. இதில் 24 பேர் பலியாகியுள்ளனர். மேலும் படகில் பயணித்த பிறரை தேடும் பணியை, மீட்புப் பணி வீரர்கள் முடக்கிவிட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

 

இந்த விபத்து குறித்து இந்தோனேசியா தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தி  தொடர்பாளர் கூறும்போது, "இதுவரை 24 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உடல் கவசம் அணிந்திருந்ததால் 74 உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.  காணாமல் போனாவர்களை தேடும் பணி தொடர்ந்து  நடந்து வருகிறது" என்றார்.

முன்னதாக 2 வாரத்திற்கு முன் சுமத்ரா தீவிலுள்ள பிரபல சுற்றுலா ஏரியில் பயணிகள் படகு விபத்துக்குள்ளானது. அந்த படகில் பயணித்த 160 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டிருந்த வேளையில் மற்றுமொரு விபத்து ஏற்பட்டுள்ளது.

Google+LinkedinYoutube