இந்திய கால்பந்து அணியின் ‘ரொனால்டோ பாய்’ - சிகரம் தொடும் கல்லூரி பியூன் மகன் நிஷூ குமார்

உலக அரங்கில் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை வலிமையாக  கட்டமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிஷூ குமார் ஒரு கல்லூரி பியூன் மகன் என்று எத்தனை பேருக்குத் தெரியும்.

தனது வறுமையைப் பற்றி கவலைப்படாமல் தன்னைச் சுற்றிலும்  உற்சாகப்படுத்தவும் ஆளில்லாத நிலையில் சுய ஆர்வமும் திறமையின்மீது வைத்த ஒரே நம்பிக்கையால் மட்டுமே அவரால் இது சாத்தியப்பட்டிருக்கிறது.

நிஷூ குமார் தற்போது கால்பந்தில் ஆர்வம் செலுத்திவரும் இளைஞர்களை கருத்தில்கொண்டு கடந்த சில ஆண்டுகளில் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கிக்கொண்டார். அது அவரது வாழ்க்கைப் பயணத்தையே வடிவமைத்துக் கொடுத்துவிட்டது.

குழந்தைகளும் இளைஞர்களும் நிஷூவிடம் மிகவும் மதிப்புவைத்துள்ளனர். நகரத்தில் அவர் ‘ரொனால்டோ பாய்’ என்றே பிரபலமாக அறியப்படுகிறார்.

இதுகுறித்து ஏஎன்ஐயிடம் பேசும்போது, தான் எப்படி ஐந்து வயதாக இருக்கும்போதே விளையாட்டில் தனக்கு ஆர்வம் வந்தது என்பதை அவர் பகிர்ந்துகொண்டார்.

"நான் ஐந்து வயதாக இருந்தபோது விளையாடுவதைத் தொடங்கிவிட்டேன், எங்கள் பள்ளி விளையாட்டு ஆசிரியரின் வழிகாட்டலில் எங்கள் பள்ளியில் மைதானத்தில் எனது விளையாட்டு ஆர்வம் தொடங்கியது. இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டேன்டைனிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவர் ஒரு அற்புதமான பயிற்சியாளர்" என்றார்.

இதற்கிடையில், நிஷூவின் பயிற்சியாளர் குல்தீப் கூறுகையில், ''இக்கிராமத்திலிருந்து 12 குழந்தைகளுக்கு இவர் பயிற்சி அளித்திருக்கிறார். நானும் இங்குள்ள குழந்தைகளும் கால்பந்தை ஒரு விளையாட்டுத் தொழிலாகவே எடுத்துக் கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை உருவாகியிருக்கிறது'' என்றார்.

நிஷூ தனது கால்பந்து விளையாட்டுப் பணியை சண்டிகர் கால்பந்து அகடமியில் இருந்து தொடங்கினார். 2010 ல் சண்டிகர் அகடமி மூலமாக தனது முதல் வெளிநாட்டு பயணத்தை அவர் மேற்கொண்டார். அகடமி  விளையாட்டுக் குழுவின் கேப்டனான அவர் வெளிநாடுகளில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்.

நிஷூ, சர்வதேச அளவில் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் மற்றும் வளைகுடா மற்றும் ரஷ்ய நாடுகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்தியாவுக்கான உறுப்பினராக 15 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வதுக்குட்பட்ட விளையாட்டுக் குழுக்களில் அவர் செயல்பட்டு வருகிறார்.

நிஷூ, முதன்முதலில் 2017ல் உருவாக்கப்பட்ட தேசிய கால்பந்து குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் பகுதியில் கிரிக்கெட்டுக்கு அதிகம் செல்வாக்கு இருந்த காரணத்தால் ஆரம்பத்தில் நிஷூவை அவரது வீட்டில் உள்ளவர்களே ஆதரவும் இல்லை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனால் இன்று அவர் சென்றுள்ள உயரத்தைக் கண்டு அவரது குடும்பம் மட்டுமல்ல இந்த நாடே வியக்கிறது.

Google+ Linkedin Youtube