பாலா படத்தில் ‘பிக் பாஸ்’ ரைஸா வில்சன்

பாலா இயக்கிவரும் ‘வர்மா’ படத்தில், ‘பிக் பாஸ்’ ரைஸா வில்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தைத் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் பாலா. விஜய் தேவரகொண்டா வேடத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கிறார். இதுதான் தமிழில் அவர் அறிமுகமாகும் முதல் படம். ஷாலினி பாண்டே வேடத்தில் மேகா சவுத்ரி நடிக்கிறார். ஒரு பெங்காலிப் படத்தில் நடித்துள்ள மேகா, தமிழில் அறிமுகமாகும் படம் இது.

 

இ4 எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை, பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ படங்களின் இயக்குநர் ராஜு முருகன் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். இதன் கிளைமாக்ஸ் காட்சி, சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் ‘பிக் பாஸ்’ புகழ் ரைஸா வில்சன் முக்கிய வேடத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது. ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் கஜோலின் பர்சனல் செகரட்டரியாக சிறிய வேடத்தில் நடித்த ரைஸா, ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருப்பதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார்.

Google+ Linkedin Youtube