ஜீ, நீட் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும்: பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

ஜீ நுழைவுத் தேர்வும், நீட் நுழைவுத் தேர்வும் இனி ஆண்டிற்கு இருமுறை நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் புதுடெல்லியில் செய்தியார்களிடம் கூறுகையில், ''பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான ஜீ தேர்வும், மருத்துவக் கல்வி பயில்வதற்கான நீட் தேர்வும் இனி ஆண்டிற்கு இருமுறை நடைபெறும்.

தேசிய சோதனைத் தேர்வு முகமை இந்த ஆண்டு தேர்வுகளை நடத்தும். ஆண்டிற்கு இருமுறை நடக்கும் இத்தேர்வில் முதன்முறை பங்கேற்ற மாணவர்கள் அடுத்த முறையும் பங்கேற்கலாம்.

எது சிறந்த மதிப்பெண்ணோ அது கணக்கிடப்படும். தேசிய சோதனைத் தேர்வு முகமையின்கீழ் நடைபெறும் அனைத்துத் தேர்வுகளும் இனி கணினியை அடிப்படையாகக் கொண்டே நடைபெறும்.

கம்ப்யூட்டர் அணுக வசதியற்றவர்களுக்கென்று ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பரில் கம்ப்யூட்டர் மையங்களில் பயிற்சி அமைக்கப்படும்'' என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் மட்டும் தமிழத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சோதனைப் பயிற்சிகளில் ஈடுபட்டவர்கள் இதுநாள் வரை டெஸ்ட் புக்லெட்களில் விண்ணப்பதாரர்கள் எழுதி வந்தனர். தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டு முற்றிலும் கணினி மயம் என்று மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube