ஜப்பானில் வெள்ளம் 38 பேர் பலி

ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஒகயாமா, ஹிரோஷிமா, எஹிமே ஆகிய மாகாணங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதி மக்கள், வீட்டைவிட்டு வெளியேற முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், பல வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு மேற்குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த 38 பேர் பலியாகியுள்ளனர். 50 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Google+LinkedinYoutube