கூகுளில் தேர்வான பெங்களூரு ஐஐடி மாணவருக்கு ஆண்டு சம்பளம் ரூ.1.2 கோடி

பெங்களூரு ஐஐடி மாணவர் ஆதித்யா பாலிவல், கூகுள் நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 22 வயதான ஆதித்யா 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ஐஐடியில் எம்டெக் படித்தவர். செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பிரிவில் சர்வதேச அளவில் 50 மாணவர்களை கூகுள் நிறுவனம் தேர்ந்தெடுத்திருக்கிறது. இதில் இந்தியாவில் இருந்து 5 மாணவர்கள் தேர்வு செய்ப்பட்டிருக்கிறார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களில் ஆதித்யாவும் ஒருவர். இவரது ஆண்டு சம்பளம் ரூ.1.2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இது ஓர் ஆண்டுக்கான திட்டமாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பேரும் கூகுள் நிறுவனத்தின் நியூயார்க் கிளையில் பணிபுரிவார்கள். ஓர் ஆண்டுக்கு பிறகு மாணவர்கள் விருப்பப்பட்டால் முழு நேர பணி வாய்ப்பினைத் தேர்ந்தெடுக்க முடியும். ஜூலை 16-ம் தேதி கூகுளில் இவர் இணைவார் என தெரிகிறது. இந்த திட்டத்தில் இணைவதற்காக சர்வதேச அளவில் 6,000 மாணவர்கள் போட்டியிட்டார்கள். இதில் 50 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர் தவிர ஐஐடி மும்பை, ஐஐடி சென்னை, ஐஐடி ரூர்கேலா மற்றும் ஐஐடி ஹைதராபாத் ஆகிய கல்வி நிலையங்களில் இருந்து மாணவர்களை கூகுள் தேர்ந்தெடுத்திருக்கிறது.

Google+ Linkedin Youtube