ஜூலை 12-ம் தேதி வெளியாகிறது ‘தமிழ்ப்படம் 2’

வருகிற வியாழக்கிழமை ‘தமிழ்ப்படம் 2’ படம் ரிலீஸாக இருக்கிறது.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தமிழ்ப்படம் 2’. சிவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப் படத்தை, ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரித்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் இசையமைத்துள்ளார்.


சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், ‘வா வா காமா... யார் தான் இங்கு ராமா...’ என்று தொடங்கும் பாடலுக்கு மழையில் நனைந்தபடி குத்தாட்டம் போட்டிருக்கிறார் கஸ்தூரி.

‘போலீஸ் அத்தியாயம்’ என்ற கேப்ஷனுடன் இந்தப் படம் உருவாகியுள்ளது. பலரையும் கலாய்த்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடும் இந்தப் படம், வருகிற வியாழக்கிழமை (ஜூலை 12) ரிலீஸாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube