பங்குச்சந்தைகள் ஏற்றம்: சென்செக்ஸ் 36,239 புள்ளிகளை கடந்தது

இந்திய பங்குச்சந்தைகள் 5 மாதங்களில் இல்லாத அளவு இன்று உயர்வு கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று 36239 புள்ளிகளை கடந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று 304 புள்ளிகள் அதிகரித்து 36,239 புள்ளிகளை எட்டியது. அதுபோலவே தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 94 புள்ளிகள் உயர்ந்து 10,947 புள்ளிகளை கடந்தது. கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதிக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகள் இந்த அளவிற்கு ஏற்றம் கண்டுள்ளது இது முதல் முறையாகும்.

இன்றைய வர்த்தகத்தில், எச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ், யெஸ் பாங்க், விப்ரோ, கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டன. டிசிஎஸ், சன் பார்மா, கோட்டாக் பாங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.

சர்வதேச பொருளாதார சூழலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளதும், பங்குச்சந்தைக்கு உக்கமளித்ததாக பங்கு வர்த்தக ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.


Google+ Linkedin Youtube