போலி செய்திகளை தடுக்க யுடியூப் முதலீடு 2.5 கோடி டாலர்

போலி செய்திகளைத் தடுக்க யுடியூப் நிறுவனம் 2.5 கோடி டாலரை முதலீடு செய்வதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக சர்வதேச அளவில் உள்ள செய்தி நிறுவனங்கள், துறை வல்லுநர்களுடன் நாங்கள் தொடர்ந்து உரையாடி வருகிறோம். இதற்காக ஒரு புதிய சாஃப்ட்வேரை உருவாக்கி வருகிறோம் என யுடியூப் தலைமை புராடக்ட் மேலாளர் நீல் மோகன் தெரிவித்தார்.

இந்தியா டுடே, வோக்ஸ் மீடியா, ஜோவெம் பான் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களுடனான ஆலோசனை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. வரும் வாரங்களில் பல மீடியா நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவோம் என நிறுவனத்தின் தலைமை தொழில் அலுவலர் ராபர்ட் கின்கிள் தெரிவித்தார்.

தரமான செய்திகளை வழங்குவதற்கக `டாப் நியூஸ்’ என்னும் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வசதி இந்தியா உள்ளிட்ட 17 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

Google+ Linkedin Youtube