உக்ரைனில் படமாகும் கார்த்தியின் ‘தேவ்’

கார்த்தி நடித்துவரும் ‘தேவ்’ படத்தின் ஷூட்டிங், உக்ரைனில் நடைபெற இருக்கிறது.

அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கத்தில் ‘தேவ்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் கார்த்தி. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். கார்த்திக், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, ஆர்.ஜே. விக்னேஷ், வம்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிவரும் இந்தப் படத்தை, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சென்னையில் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பும், ஹைதராபாத்தில் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பும் முடிந்த நிலையில், 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் உக்ரைனில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. காதல் மற்றும் ஆக்‌ஷன் என ‘பையா’ படத்தின் பாணியில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது. ‘தேவ்’ படத்தைத் தொடர்ந்து ‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. இதில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

கார்த்தி நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை ‘கடைக்குட்டி சிங்கம்’ ரிலீஸாக இருக்கிறது.

Google+ Linkedin Youtube