நிதி அதிகாரத்தின் மூலமே பெண்கள் சமூக தீமைக்கு எதிராக போராட முடியும்: பிரதமர் மோடி உறுதி

நிதி அதிகாரம் கொண்ட பெண்களால் மட்டுமே சமூக தீமைகளுக்கு எதிராக போராட முடியும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினருடன் மொபைல் ஆப் மூலம் இன்று கலந்துரையாடினார். சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இதில் பங்கு கொண்டனர்.


அப்போது அவர் பேசுகையில் ‘‘ பெண்கள் தற்போது அனைத்து துறையிலும் முன்னேறி வருகின்றனர். குறிப்பாக விவசாயம், பால் பொருள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். பெண்கள் இல்லாமல் இந்த துறைகள் செயல்பட முடியாது. பெண்களின் விடாமுயற்சி மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு மிகுந்த உத்வேகத்தை தருகிறது.

மகளிர் சுய உதவிக் குழுக்களால், இன்று பெண் தொழில் முனைவோர்கள் உருவாகி வருகின்றனர். இதுபோனற சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் பொருளாதாரத்தில் வலிமை அடைந்து வருகின்றனர். பெண்கள் நிதி சுயசார்புடன் இருப்பதால் அவர்கள் மேலும் உறுதியானவர்களாகவும், அதிகாரம் மிக்கவர்களாகவும் மாறும் சூழல் ஏற்படுகிறது. நிதி அதிகாரம் இருந்தால்மட்டுமே பெண்கள் சமூக தீமைக்கு எதிராக போராட முடியும்’’ எனக் கூறினார்.

Google+ Linkedin Youtube