”உங்கள் பாஸ்போர்ட்டை சரி பார்க்க என்னை கட்டி பிடியுங்கள்” பெண்ணிடம் கேட்ட போலீஸ் அதிகாரி

ஏழை பெண்களின் பாதுகாப்பு இந்தியாவில் கேள்விக்குறியாகிறது. காஜியாபாத் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர்  போலீஸ் அதிகாரியின் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளார்.

தேவேந்திர  சிங் என அடையாளம் காணப்பட்ட போலீஸ் அதிகாரி  பெண் பத்திரிகையாளரின்  பாஸ்போர்ட் தகவல் குறித்து  சரிபார்க்க வந்தபோது அந்தப் பெண் தனது வீட்டிலேயே துன்புறுத்தப்பட்டார் என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது.

முன்னணி தின பத்திரிகை ஒன்றின் பத்திரிகையாளராக இருக்கும்  ஸ்வேதா கோஸ்வாமி,  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் காசியாபாத் போலீசாருக்கு டுவிட் செய்து உள்ளார். 

அவர் கூறியதாவது;-

ஒரு விண்ணப்பதாரரின் பாதுகாப்பு, குறிப்பாக ஒரு பெண்ணின், பாதுாப்பு  கேள்விகுறியாக உள்ளது.   பாஸ்போர்ட் புதுப்பிப்புக்கான போலீஸ் சரிபார்ப்பின் போது பெரிய பிரச்சினையாக உள்ளது.

காஜியாபாத்தில் சில நிமிடங்களுக்கு முன்பு என்  பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக வந்த போலீஸ்காரர் என்னிடம் ஆபாசமாக நடந்து கொண்ட அனுபவம் கிடைத்தது.

இந்த அனுபவம் மிகவும் பயமாக இருந்தது, அவர் வீட்டை விட்டு வெளியேறும் வரை என் உதவியாளர்  கூட இருக்க வேண்டி இருந்தது. மேலும், காவல்துறை அதிகாரி  வேண்டுமென்றே செயல்முறைகளை தாமதப்படுத்த முயன்றார். அது அதிக நேரத்தை வழங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

நான் உங்கள் பாஸ்போர்ட்டை சரிபார்க்க என்னை கட்டி பிடிக்க வேண்டும் என கேட்கும் தைரியம் அவருக்கு இருந்தது. 

இப்போது நீ என்ன கொடுக்கிறாய்? " போலீஸ்காரர்  பெயர் தேவேந்திர சிங் என அவர் குறிப்பிட்டு  உள்ளார்.

Google+ Linkedin Youtube