கருணாநிதி மறைவு: சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் இரங்கல்

திமுக தலைவர் மு. கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். அவருக்குச்சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தரப்பிலும், அணி வீரர் சுரேஷ் ரெய்னா தரப்பிலும் இரங்கல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாககடந்த 10 நாட்களுக்கும் மேலாகக் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைபலன் அளிக்காமல் நேற்று மாலை 6.10 மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது.

கருணாநிதி மறைவுக்குத் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தேசிய அளவில்தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேரில் வந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அந்தஅணியின் வீரர் சுரேஷ் ரெய்னாவும் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட இரங்கல் செய்தியில், ‘‘தமிழகத்தில் சூரியன் இன்று அஸ்தமித்துவிட்டது. தமிழ் மொழிக்கும், மாநிலத்துக்கும் கருணாநிதியின் பங்களிப்பு அளப்பரியது’’ எனத் தெரிவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் பதிவிடுகையில், ‘‘திமுக தலைவர்கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். கருணாநிதியின் பிரிந்து வாடும்அவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன்’’ எனத் பதிவிட்டுள்ளார்.

Google+LinkedinYoutube