ஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறி பிரபலமானவர். நேற்று கூட தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியையும் வம்புக்கு இழுத்திருந்தார்.

இந்நிலையில் தான் இந்த மாதிரி பிரபலங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதற்கு காரணம் ஒரு முன்னணி நடிகை என இப்போது கூறியுள்ளார். ஆனால் அந்த முன்னணி நடிகையின் பெயரை சொல்லவில்லை.

எப்படி அவர் காரணம் என்றால் ஸ்ரீரெட்டி ஒருநாள் தனது காதலருடன் ஒரு பார்ட்டிக்கு சென்றுள்ளார். அதே பார்ட்டிக்கு அந்த நடிகை தனது காதலருடன் வந்துள்ளார். அந்த நடிகை பின்னே பார்ட்டியில் உள்ள அனைத்து ஆண்களும் சென்றுள்ளனர் இவரது காதலர் உள்பட.

இதை பார்த்த அவருக்கு அந்த நடிகை போல் ஆகவேண்டும் என ஆசை வந்துள்ளது. அதனாலேயே வாய்ப்பிற்காக குறிப்பிட்ட பிரபலங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

Google+LinkedinYoutube