இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி 347 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 374 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவின் லாம்போக் தீவில்  திங்கட்கிழமை இரவு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அலகில் 6.8, 7 ஆகப் பதிவாகின. அதன் 132 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

 

 நில நடுக்கம் ஏற்பட்ட லாம்போக் தீவில் சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.  அங்கு 80 சதவீத வீடுகள் நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளன.

ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.  சுமார் ஒரு லட்சத்துக்கு அதிகமானவர்கள் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த நில நடுக்கத்துக்கு பலியானனோர் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது.

சுமார் 1000க்கு மேற்பட்டவர்கள் இந்த நில நடுக்கத்தில் காயமடைந்ததாகவும் , மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

முன்னதாக 2004 ஆம் ஆண்டில்  இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் ரிக்டர் அளவில் 9.3 சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்துக்கு  220,000 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube