‘‘கருணாநிதி சிஎஸ்கேவின் தீவிர ரசிகர்”

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  தீவிர ரசிகராக இருந்தார் என  பிசிசிஐ முன்னாள் தலைவர் என். சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி  செவ்வாய்கிழமை மாலை 6. 10 மணியளவில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு குறித்து பல்வேறு பல்வேறு தலைவர்களும், ஆளுமைகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கருணாநிதியின் அரசியல் ஆளுமை பலருக்கும் தெரியும் ஆனால் அவர் கிரிக்கெட் மீது மிகுந்த நேசம் கொண்டிருந்தார் என பிசிசிஐ முன்னாள் தலைவர் என். சீனிவாசன் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து முன்னாள் பிசிசிஐ தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான என்.சீனிவாசன் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் "கலைஞரின் ஆளுமை அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உள்ளவர் என்பது  பலருக்கும் தெரியாத உண்மை. அவர் விளையாட்டின் மீது தீவிர காதலை கொண்டிருந்தார்.

அவர் கிரிக்கெட்டை மிகவும் நேசித்தார். அவர் விளையாட்டுகளை மிகவும் ஆதரித்தார். இந்தியா சிறப்பாக விளையாடினால் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். இந்தியா தோற்றுவிட்டால் எனக்கு தொலைபேசியில் அழைப்பு விடுப்பார்.

அவர் சென்னை சூப்பர் கிங்ஸின் தீவிர ரசிகராக இருந்தார். சிஎஸ்கே சேப்பாக்கத்தில் விளையாடும்போது அவர் ஸ்டேடியத்துக்கு வந்து மேட்ச்களை பார்த்திருக்கிறார். சிஎஸ்கே தோற்றுவிட்டால் அவர் பல நேரங்களில் வருத்தமடைத்திருக்கிறார். சிஏஸ்கே இந்தமுறை சென்னையில் விளையாடி இருந்தால் அவர் நிச்சயம் நேரில் வந்து பார்த்து மகிழ்ந்திருப்பார்” என்று தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube