சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா

#Vijay #M.Sasi Kumar #S.S.Rajamouli

பாகுபலி என்ற மெகா ஹிட் படத்தை சினிமா உலகிற்கு தந்தவர் இயக்குனர் ராஜமௌலி. பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்‌ஷனை பார்த்த இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது.

தற்போது ராஜமௌலி ஜுனியர் என்.டி.ஆர்ரையும் ராம்சரணையும் வைத்து ஒரு அரசியல் பிண்ணனி கொண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பின் போது தான் இயக்குனர் சசிகுமார் ராஜமௌலியை சந்தித்தார்.

இதனால் சசிகுமார் அந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு உண்மையாக, சசிகுமார் நடிகர் விஜய்யை வைத்து இயக்க இருக்கும் வரலாற்று படத்திற்காக ராஜமௌலியிடம் ஆலோசனை பெறுவதற்காக தானாம்.

இந்த படம் சர்காருக்கு அடுத்த அட்லியுடனான படத்திற்கு பிறகு விஜய் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் இப்போதே இதை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

Google+ Linkedin Youtube