ஐஎஸ்ஐ பெறாத ஹெல்மெட் விற்பது குற்றம்: 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.2 லட்சம் அபராதம்; சட்டம் கொண்டு வர முடிவு

ஐஎஸ்ஐ எனப்படும் இந்தியதர அங்கீகார நிறுவனம் அல்லாத ஹெல்மெட் விற்பது குற்றம் எனக் கருதப்பட உள்ளது. இதற்கான தண்டனையாக 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான மசோதாவின் சட்ட முன்வடிவு மத்திய தரை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது, மத்திய தரைவழிப் போக்குவரத்து துறையின் முக்கியப் பாதுகாப்பு முடிவாகக் கருதப்படுகிறது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ரூ.75 முதல் ரூ.150 வரை உள்ள விலையிலான ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. நாடு முழுவதிலும் விற்பனையாகும் இந்த மலிவான ஹெல்மெட்டுகளில் ஐஎஸ்ஐ முத்திரை இடம் பெற்றிருப்பதில்லை. ஆனால், ஐஎஸ்ஐ கொண்ட ஹெல்மெட்டுகளின் விலை ரூ.800 முதல் ரூ.3000 விலைவில் தரத்திற்கு ஏற்றபடி விற்கப்படுகின்றன.

இந்த சட்டம்,அடுத்த வருடம் ஜனவரி 15 முதல் அமலாக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால், ஹெல்மெட் தயாரிப்பாளர்களுக்கு இது குறித்த விதிமுறைகளுடன் புதிய அறிவிக்கையும் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு ஹெல்மெட்டின் எடை 1.2 கிலோ இருக்க வேண்டும். அவற்றில் ஐஎஸ் ஐ தரத்துடன் தயாரிக்கப்படுபவைக்கு மட்டும் விற்பனை அனுமதி அளிக்கப்படும்.

எனவே, அடுத்த வருடம் ஜனரி 15-க்குள் பழைய கையிருப்புகளை காலிசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்துடன், ஹெல்மெட்டுக்களின் தயாரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட அமலுக்கு வந்த பின் ஹெல்மெட் அணியும் இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு சுமார் இரண்டு மாதங்கள் காலஅவகாசம் அளிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இதற்கான சட்டம் அமலான பின் முதன்முறையாக குற்றம் செய்வபர்களுக்கும் எந்தவித எச்சரிக்கையும் அளிக்கப்படாது. அவர்கல் மீது நேரடியாக வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது. புதிய ஹெல்மெட்டுகள் வாகன ஓட்டுநரின் தலையுடன் சேர்த்து முகத்தையும் பாதுகாக்கும்படி அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்திடம் உள்ள ஒரு புள்ளீவிவரத்தின்படி, இந்தியாவில் கடந்த 2016 ஆம் வருடம் 10,135 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் தரமான ஹெல்மெட் அல்லது அதை அணியாமல் இருந்தமையால் அந்த விபத்துக்கள் நேர்ந்துள்ளன. 2017-ல் இந்த எண்ணிக்கை 35,975 என உயர்ந்துள்ளது

Google+ Linkedin Youtube