கருக்கலைப்பு சட்டப்பூர்வ மசோதாவை நிராகரித்த அர்ஜெண்டினா

அர்ஜெண்டினாவில் கருவுற்ற 14 வாரங்களுக்குள் செய்யப்படும் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கான மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.

கருக்கலைப்புக்கு  அதிகாரப்பூர்வமாக்குவதற்காக அர்ஜெண்டினா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 31 உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவாகவும், 38 உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து 14 வாரங்களுக்குள் செய்யப்படும் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க முடியாது என  நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது.

கருக்கலைப்புக்கு ஆதரவான முடிவு வரும் என காத்துக் கொண்டிருந்த பெண்களுக்கு நாடாளுமன்றத்தின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களுடன் வழக்கறிஞர்களும்  கலந்துக் கொண்டனர்.

அர்ஜெண்டினாவை பொறுத்தவரை தாயின் உயிருக்கு ஆபத்து என்ற சூழலில் மட்டுமே கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு சட்டவிரோதமாக கருகலைப்பு செய்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழந்தனர்.

இதனை மேற்கொள்காட்டியே கருக்கலைப்புக்கு ஆதரவான மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் மசோதா தோல்வி அடைந்துள்ளது.

இந்த நிலையில் "சட்டப்பூர்வமாக இருந்தாலும் சரி...இல்லாவிட்டாலும் சரி பெண்கள் அவர்கள் விருப்பத்திற்கு கருக்கலைப்பு செய்து கொள்வார்கள் "என்று பெண் வழக்கறிஞர்கள் பலர் அர்ஜெண்டினா  அதிபர்  மௌரிசியோ மாக்ரிக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

Google+ Linkedin Youtube