ஆர்பிஐ இயக்குநர் குழுவில் ஆடிட்டர் குருமூர்த்தி

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் பகுதி நேர உறுப்பினராக ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவரைத் தவிர சதீஷ் மாரதே என்பவரும் ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஆடிட்டர் குருமூர்த்தி, சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக வும் இருக்கிறார். சதீஷ் மாரதே, சாகர் பாரதி என்னும் என்ஜிஓ நிறுவனத்தின் புரவலராக இருக் கிறார். இருவரும் 4 ஆண்டு களுக்கு நியமனம் செய்யப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரை சேர்த்து ரிசர்வ் வங்கி யின் அரசாங்க உறுப்பினர் களின் எண்ணிக்கை 10 ஆக உயர்கிறது.

முதல் முறையாக இயக்குநர் பொறுப்பை வகிக்கிறேன். இதுவரை பல தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் இயக்குநர் பொறுப்பினை ஏற்குமாறு வாய்ப் புகள் வந்தன. ஆனால் என் னுடைய பேச்சு சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதற்காக இதுவரை எந்த இயக்குநர் குழு பொறுப்பினையும் ஏற்கவில்லை. ஆனால் தற்போது பொதுநலன் கருதி ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு பொறுப்பை ஏற்கிறேன் என குருமூர்த்தி தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருக்கிறார்.

ஆனால் இதற்கு முன்பு ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) செயல்பாடு கள் குறித்து குருமூர்த்தி கடுமை யாக விமர்சனம் செய்திருக்கிறார். ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை ரகுராம் ராஜன் குறைத்துவிட்டார் என்றும், இந்திய தொழில்கள் நலிவடைய ரிசர்வ் வங்கியும் ஒரு காரணம் என்றும் குருமூர்த்தி ஏற்கெனவே கூறியிருக்கிறார். மேலும் அரசாங்கம், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கலை நோக்கி செல்வதற்கு ஏதுவாக ரிசர்வ் வங்கியின் செயல்பாடு இருக்கிறது என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

Google+ Linkedin Youtube