ஏலியன் போல சிவகார்த்திகேயன்

ஆமிர் கான் ‘பி.கே’ இந்தி படத்தில் ஏற்று நடித்த ஏலியன் கதாபாத்திரம் மற்றும் ‘2.0’ படத்தின் அக்சய்குமார் கதாபாத்திரம் போல, எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படத்தில் ஏலியன் போல சிவகார்த்திகேயன் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கிறார். படத்தில் மிகவும் முக்கியமான இந்தக் காட்சி தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.

பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, தற்போது ராஜேஷ் மற்றும் ரவிக்குமார் ஆகியோரது படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயன் படத்துக்கு அவர் முதல்முறையாக இசையமைக்க உள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

Google+ Linkedin Youtube