உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியல்: முதல் 10 இடங்களில் அக்‌ஷய்குமார், சல்மான் கான்

உலகிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் குறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் இந்திய  நடிகர்கள் இருவர் இடம் பெற்றுள்ளனர்.

ஆண்டுதோறும் விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஹாலிவுட்டின் ஜார்ஜ் க்லோனி  முதலிடம் பிடித்திருக்கிறார். அவரது ஆண்டு வருமானம் 239 மில்லியன் டாலர் ஆகும்.

பாலிவுட் நடிகர்களான அக்‌ஷய் குமாரும், சல்மான் கானும் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளனர். ஆண்டுக்கு 40.5 மில்லியன் டாலர் சம்பளம் பெற்று அக்‌ஷய் குமார் ஏழாவது இடத்தில் உள்ளார். 38.5 மில்லியன் டாலர் பெற்று சல்மான் கான் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

Google+ Linkedin Youtube