சோபியா கைது: அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?- கமல் கேள்வி

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை முன்னால் 'பாசிச பாஜக ஒழிக' என்று முழக்கமிட்ட சோபியா கைது செய்யப்பட்டது சரியெனில் அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பொது இடங்களில் குரல் எழுப்புவதும், விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப்படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப் பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம். அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?

நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் பின்னால் அமர்ந்திருந்த சோபியா என்ற பெண் பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்டுள்ளார்.

இது குறித்து தமிழிசை அளித்த புகாரில் பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சோபியாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Google+ Linkedin Youtube