வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்தை வாங்கியது சன் டிவி

வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘பார்ட்டி’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பார்ட்டி’. ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

ஜெய், ஷாம், சந்திரன், சத்யராஜ், ஜெயராம், சிவா, நாசர், சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுவதும் பிஜி தீவில் நடைபெற்றுள்ளது.

கேங்ஸ்டர் காமெடிப் படமான இதன் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.

‘பார்ட்டி’ படத்துக்குப் பிறகு சிம்புவை வைத்து ‘மாநாடு’ என்ற படத்தை இயக்க இருக்கிறார் வெங்கட் பிரபு. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இப்படத்தைத் தயாரிக்கிறார்.

Google+ Linkedin Youtube