சிரியாவில் ஈரான் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 3 வீரர்கள் பலி

சிரியாவில் அமைந்துள்ள ஈரான் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 சிரியா நாட்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து லண்டனில் இயங்கும் சிரிய கண்காணிப்புக் குழு கூறும்போது, ‘‘சிரியாவிலுள்ள ஹமா, டார்டஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஈரான் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 சிரியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 23 பேர் காயமடைந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதமும் இதே பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கடந்த 18 மாதங்களில் சிரியாவில் 200 வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளதாகவும் சிரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளதுடன் இது குறித்து பதிலளிக்கவும் மறுத்துவிட்டது.

Google+ Linkedin Youtube