இரண்டாவதாக இயக்கப் போகும் படத்தில் மும்முரம் காட்டும் தனுஷ்

இரண்டாவதாக இயக்கப் போகும் படத்துக்கான வேலைகளில் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளார் தனுஷ்.

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் பல திறமைகளுக்குச் சொந்தக்காரரான தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். இயக்குநராகவும் தனுஷுக்கு வெற்றியைக் கொடுத்தது இந்தப் படம்.

ராஜ்கிரணின் சின்ன வயது வேடத்தில் தனுஷும், ரேவதியின் சின்ன வயது வேடத்தில் மடோனா செபாஸ்டியனும் நடித்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்தார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்தது.

‘பவர் பாண்டி’யைத் தொடர்ந்து வரலாற்றுப் படமொன்றைத் தனுஷ் இயக்கப் போவதாகவும், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் அதைத் தயாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தற்போது பைனான்ஸ் பிரச்சினையில் இருப்பதால், அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

இந்நிலையில், தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்குவதற்கான வேலைகளில் மும்முரமாகியுள்ளார் தனுஷ். படத்துக்கான லொகேஷன் பார்ப்பதற்காகத் திருநெல்வேலியில் முகாமிட்டுள்ளார். தனுஷ் நடிப்பில் ‘மாரி 2’ படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

Google+ Linkedin Youtube