அமெரிக்காவில் உலக இந்து சமய மாநாடு: இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்-  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அழைப்பு

இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்று உலக இந்து மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ளார்.

சுவாமி விவேகானந்தர் அமெரிக் காவின் சிகாகோ நகரில் கடந்த 1892 செப்டம்பர் 8-ம் தேதி இந்து மதம் குறித்து ஆற்றிய உரை உலக பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்வின் 125-வது ஆண்டையொட்டி இந்து சமய மாநாடு சிகாகோ நகரில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:

கடந்த 1,000 ஆண்டுகளாக இந்துக்கள் அவதிப்பட்டனர். இதற்கு காரணம் இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடுகளை நாம் மறந்ததுதான்.

மகாபாரதத்தில் இருந்து இந்துக் கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தருமர், கிருஷ்ணரின் கருத்துகள் எப்போதும் ஒன்றாகவே இருந்தன. எந்த நேரத்திலும் கிருஷ்ணரின் சொல்லை தருமர் மீறியதில்லை.

இந்துக்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும். ஒரே குடையின் கீழ் வர வேண்டும். அப்போதுதான் இந்து சமுதாயம் தழைத்து செழித் தோங்கும். சிங்கம் தனியாக இருந் தால் காட்டு நாய்கள் ஒன்றுசேர்ந்து சிங்கத்தை அழித்துவிடும். இதை கருத்திற் கொண்டு இந்துக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். நமக்கு ஆதிக்க ஆசை கிடையாது. காலனி நாடுகளை உருவாக்கும் எண்ணமும் கிடையாது.

காஷ்மீர் பண்டிட்டுகள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி உள்ள னர். அவர்கள் 28 ஆண்டுகளாக பொறுமை காத்து வருகின்றனர். இந்த பொறுமை வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை. இந்து மதம் உலகின் மிகவும் பழைமை யான மதமாகும். அமைதியின் சின்னமாகும்.

நாம் பழைமையை நேசிக் கிறோம். அதேநேரம் புதுமையை யும் விரும்புகிறோம். அடுத்த 20 ஆண்டுகளில் மனித குலத்துக்கு என்ன தேவை என்பதை இப்போதே யோசிக்கிறோம். நமது ஞானம் உலகிற்கு தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எழுத்தாளர் நைபால் ஆகியோரின் மறைவுக்கு மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒரு நிமிட மவுன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

Google+ Linkedin Youtube