பிக்பாஸ்-2; ஐஸ்வர்யாவை ஆதரிக்கிறாரா ஓவியா?- திடீர் ட்வீட்டால் பரபரப்பு: ‘you too oviya’ அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்

பிக்பாஸ்-2 சீசனில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் இருக்க பிக்பாஸ் சூப்பர் ஸ்டார் ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் #ஐஸ்வர்யாதத்தா என மொட்டையாக போட்டுவிட ஓவியா ஆர்மி ரசிகர்கள் குழம்பிப்போய் தங்களுக்குள் மோதிக்கொள்கின்றனர்.

பிக்பாஸ்-2 சீசனில் ஒருவர் இவ்வளவு நேரமையற்றவராக இருக்க முடியுமா? என்று கேட்கும் அளவுக்கு ஐஸ்வர்யா தனது செயலால் சிறுமைப்பட்டு போயுள்ளார். கடந்த சீசனில் ஜூலி தனது மாற்றி மாற்றி பேசும் பேச்சால் கேலிக்குள்ளாக்கப்பட்டார்.

ஒரு கட்டத்தைல் ஓவியாவுடன் நெருக்கமாக இருக்க அனைஅவரும் ஜூலியை ஒதுக்கியபோது ஓடிவந்து ஆறுதல் சொன்ன ஓவியாவை ஜூலி போட்டுக்கொடுக்க குறும்படத்தால் அவரது பொய் போட்டுடைக்கப்பட்டது.

ஓவியாவை வெறுப்பேற்றுகிறேன் என்ற போர்வையில் ஜூலி செயல்பட்டதால் அவர் வெளியேற்றப்பட்டபோது கமல்ஹாசன் ஜூலியை ஒன்றும் செய்துவிடக்கூடாது என்று வேண்டுகோள் வைக்கும் அளவுக்கு ஓவியாவின் ரசிகர்கள் கோபமாக இருந்தனர்.

ஓவியா ஒருவர்தான் பிக்பாஸின் ரோல் மாடல் என்கிற நிலையில் வருகிற போட்டியாளர்கள் எல்லாம் வெளிப்படையாக இருப்பதுபோன்று நடிக்க முயன்று சிறுமைப்பட்டு போனார்கள். பிக்பாஸ் சீசன் இரண்டிலும் அதேபோன்ற சிலர் முயன்றார்கள்.

அதில் ஐஸ்வர்யாவை எல்லோரும் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் தனித்துவமில்லாத யாஷிகாவை சார்ந்திருக்கும் நடவடிக்கையாலும், தனது வன்மத்தை தீர்த்துக்கொள்ள டாஸ்க்கில் குப்பையை கொட்டியதும் பார்வையாளர்களை வெறுப்புக்குள்ளாக்கியது. மொத்தத்தில் ஐஸ்வர்யா ஒரு தனித்தன்மையில்லாத, முதிர்ச்சியற்ற எடுப்பார் கைப்பிள்ளை என்பது வெளிப்படையாக தெரிந்தது.

ஐஸ்வர்யாவை தவிர வேறு யாரையும் கமல் இந்த அளவுக்கு கலாய்த்திருக்க மாட்டார். காரணம் ஐஸ்வர்யாவின் ஏமாற்றுத்தனமும், அதைப்பற்றிய குற்ற உணர்வின்மையும் கமலையே கோபப்பட வைத்தது. ஆனால் பிக்பாஸ் டிஆர்பிக்கு ஐஸ்வர்யா தேவைப்படுகிறார்போலும்.

அதனால்தான் மேலே முதலிடத்திலிருந்த சென்றாயன் குறைந்த வாக்கு என வெளியேற்றப்பட்டதும், கடைசி பெஞ்ச் ஐஸ்வர்யா முதல் மாணவியாக்கப்பட்டதும் நடந்தது. ஆனால் இதை கமல்ஹாசனே ஏற்றுக்கொள்ளவில்லை. வாக்கு, தேர்தல், கிராபிக்ஸ் என அவர் படம் காட்டியதை மக்கள் ரசிக்கவில்லை.

கமல் ஒருபடி மேலேபோய் அடுத்த வாரம் எவிக்‌ஷனுக்கு ஐஸ்வர்யா தேர்வு செய்யப்பட வேண்டும் அதற்கு பிக்பாஸ் என்ன செய்வாரோ எனக்கு தெரியாது எனது வேண்டுகோள் என்று கூறினார். அதன்படி எவிக்‌ஷனுக்கு இரண்டுபேரை தேர்வு செய்ய பிக்பாஸ் உத்தரவிட எல்லோரும் ஐஸ்வர்யாவை ஏற்றுக்கொள்ளச் சொல்ல அவர் மறுக்க முடிவு எய்தப்படவில்லை.

பின்னர் அனைவரும் சேர்ந்து முடிவுக்கு வந்து இரண்டு பேரை அறிவியுங்கள் என்றவுடன் ஐஸ்வர்யா, மும்தாஜ் பெயர் முடிவானது. ஆனால் ஐஸ்வர்யா மீது மக்களுக்கு கோபம் குறையவேண்டும் என்பதற்காக பிக்பாஸ் சீசன் 1 டீம் இறக்கிவிடப்பட்டது.

அவர்கள் அனைவரும் மும்தாஜை கார்னர் செய்து சில வேலைகள் செய்தனர். இது இப்படிப்போக திடீரென ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் #Aiswarya dutta என பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ஓவியாவின் ரசிகர்கள் குழம்பிப் போனார்கள். இதற்கு ஓவியாவின் ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள ரசிகர்கள் சிலர் ஓவியாவின் ட்விட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று கூற அதையும் சில ஆமோதித்துள்ளனர்.

சிலர் ஓவியாவுக்கு பின் அடுத்த தலைவை ஐஸ்வர்யாதான் அவரைத்தான் ஓவியா அடையாளங்காட்டியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். சிலர் இதை மறுத்து ஓவியா எங்கே அவங்க துணிச்சல் எங்கே, எதற்கெடுத்தாலும் அழும் ஐஸ்வர்யா எங்கே என்று கேட்டுள்ளனர்.

‘ஒரு தமிழ்ப்பொண்ணு டைடில் ஜெயிக்கணும்னு சொன்னது குத்தமா?’ என ரித்விகாவை முன்னிறுத்தி சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் ஓவியாவின் ட்விட்டை பொறுத்துக்கொள்ள முடியாமல் ‘you too oviya’ என கேட்க அதற்கு சிலர் பொறுமையாக இருக்கவும் ஓவியா அடுத்து பதிவு செய்வார் என்று பதிலளித்துள்ளனர்.

இன்னும் சிலர் பிக்பாஸின் ப்ரமோஷன் யுக்தியா இது என போட்டுடைத்துள்ளனர். மொத்தத்தில் ஐஸ்வர்யாவை காப்பாற்றும் யுக்தியாகவே இந்த ட்விட்டர் பதிவு படுகிறது. பிக்பாஸ் ஏன் ஐஸ்வர்யாவை இந்த அளவுக்கு காக்கிறார் என்பதை சிலர் மீம்ஸ் போட்டு கேள்வி எழுப்பியுள்ளனர்.

Google+ Linkedin Youtube